கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் கம்பீர் மற்றும் மூத்த வீரர் கோலி ஆகியோர் கடுமையான கண்டனங்களை எதிர்கொள்கின்றனர். இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட கேப்டன் பும்ராவின் உழைப்பெல்லாம் வீணாகப் போனது என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். சிட்னி டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் காயம் காரணமாக பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.