தற்போது ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸி அணி வெற்றிபெற இன்னும் 91 ரன்கள் தேவை. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா இந்த இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அது இந்திய அணிக்குப் பெரும்பின்னடைவாக அமைந்துள்ளது,
இரண்டாம் நாளின் போது பும்ரா காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. பின்னர் இன்று அவர் பேட் செய்ய வந்தாலும் காயத்தின் தன்மை காரணமாக அவரை பந்துவீச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீரிஸில் அதிக விக்கெட் எடுத்த பவுலராக பும்ரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மொத்தம் 32 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.