தற்போது ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸி அணி வெற்றிபெற இன்னும் 91 ரன்கள் தேவை. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா இந்த இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அது இந்திய அணிக்குப் பெரும்பின்னடைவாக அமைந்துள்ளது,
இதனால் களத்தில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார் கோலி. வெற்றியின் அருகில் இருப்பதால் ஆஸி ரசிகர்கள் ஆரவாரமாகக் கூச்சலெழுப்பி கோலியைக் கிண்டல் செய்தனர். அவர்களுக்குப் பதிலடி தரும் விதமாக கோலி தன்னுடைய பேண்ட் பாக்கெட்டை வெளியே எடுத்துவிட்டு தன்னிடம் உப்புத்தாள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பந்தை பழையதாக்க ஆஸி வீரர்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகிய உருவரும் அதுபோல செய்து மாட்டிக்கொண்டு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.