சிட்னி டெஸ்ட்டை வென்ற ஆஸ்திரேலியா… சுக்கு நூறானது இந்தியாவின் WTC இறுதிப் போட்டி கனவு!

vinoth

ஞாயிறு, 5 ஜனவரி 2025 (08:58 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட  பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற அளவில் முன்னணி வகித்து வந்தது . இந்நிலையில் சிட்னியில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 181 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து நான்கு ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியிஸ் ஸ்காட் போலண்ட் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 162 ரன்கள் இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இந்திய அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் பும்ரா பந்து வீசாதது பின்னடைவாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் தகுதியை இழந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்