இந்திய அணி வீரர்களின் கால் செருப்புக்கு கூட நாங்கள் சமம் இல்லை. கைகுலுக்காமல் சென்றது சரிதான்: பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்,..

Mahendran

திங்கள், 29 செப்டம்பர் 2025 (18:11 IST)
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்த அதேசமயம், பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கடும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் யூடியூபர்கள்  “எங்களைப் போல தொழில்முறை அல்லாதவர்கள் கூட இதை விட நன்றாக விளையாடுவோம்’ என்று கிண்டல் செய்தனர்.
 
ஒரு ரசிகர், "பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக நினைத்தாலும், இந்தியாவை வெல்ல முடியாது... எங்கள் தலைமுறையால் அவர்களை தோற்கடிக்க முடியாது. அவர்களின் காலணிக்கு கூட நாங்கள் சமமானவர்கள் இல்லை. எங்களுடன் கைகுலுக்காமல் இருந்ததுதான் அவர்கள் செய்த சரியான விஷயம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
மற்றொரு ரசிகர், "மீண்டும் மீண்டும் ஏமாற்றம் அடைகிறோம். இது மூன்றாவது போட்டி. இன்று எங்களுக்கு சிறிது நம்பிக்கை இருந்தது, ஆனால் இந்திய அணி மிகவும் வலிமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறினார்.
 
மற்றொரு ரசிகர், "பாகிஸ்தானின் ஆட்டத்தால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். சாஹிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஜமான் ஆகியோரின் நல்ல தொடக்கத்திற்கு பிறகு, ஃபைட்டர் ஜெட்டுகள் போல் எங்கள் விக்கெட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்து எங்கள் இதயங்களை நொறுக்கின" என்று ரவுஃபின் சைகையை குறிப்பிட்டுப் பேசினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்