ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னிலை! திரும்ப வருவாரா பும்ரா? நாளை என்ன நடக்கும்?

Prasanth Karthick

சனி, 4 ஜனவரி 2025 (13:37 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் இருந்தாலும் நாளை என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற அளவில் முன்னணி வகித்து வருகிறது. தற்போது நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ட்ரா செய்தாலே உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் சூழல் உள்ளது.

 

இந்நிலையில் கடைசி போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருந்தாலும், ஆஸ்திரேலிய அணியை 181 ரன்களுக்குள் சுருட்டியது. இன்று நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை இந்தியா பெற்று ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னணியில் உள்ளது.

 

நாளை இந்தியாவின் மீத பேட்டிங் முடிந்ததும் ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கும். இந்திய அணிக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில் 250 ரன்களுக்குள் இரண்டாவது இன்னிங்ஸை முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று தற்போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பும்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காயம் காரணமாக ஸ்கேன் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நாளை இந்திய அணி பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தாவிட்டால் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்று விடும். இந்த தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா நாளைய போட்டியில் இடம்பெறாவிட்டால் இந்திய அணியின் நிலை மோசமாகும். ஒருவேளை பும்ரா வந்தாலும் காயம் காரணமாக அவர் சிறப்பாக பந்து வீசமுடியுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்