மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்: எந்த நாட்டில் தெரியுமா?

Webdunia
வியாழன், 20 மே 2021 (08:45 IST)
இந்தியாவில் ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் 50 போட்டிகள் நடைபெற்று முடிந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது என்பதும் குறிப்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்ததாலும் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இதனால் 51வது போட்டியில் இருந்து அனைத்து போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தும் நிலை இல்லை என்பதால் வெளிநாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
சற்று முன் வெளியான தகவலின்படி ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட் அல்லது இங்கிலாந்து ஆகிய இரண்டில் ஒரு நாட்டில் நடத்த நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளிவரும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்