தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

Prasanth Karthick

வியாழன், 17 ஏப்ரல் 2025 (15:30 IST)

ஐபிஎல் சீசனில் தற்போது வரை புள்ளிப்பட்டியலில் அதள பாதாளத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதிக் கொள்ள உள்ளன.

 

இதுவரை இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் புள்ளி வரிசையில் 9வது இடத்தில் இருக்கிறது. ஆரம்ப போட்டிகளில் சன்ரைசர்ஸின் பேஸ்பால் பேட்டிங் என்னும் கடப்பாறை பேட்டிங் அதிக ரன்கள் எடுக்க உதவினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் எதிரணியின் பவுலிங் யூனிட்கள் சன்ரைசர்ஸை வறுத்து விட்டன. கடந்த போட்டியில்தான் பிரச்சினைகளை களைந்து பஞ்சாப்பை வென்றார்கள். இனியாவது முழுவதும் பேட்டிங்கை நம்பிய ஆட்டத்தில் இறங்காமல் பேட்டிங், பவுலிங் என இரு பக்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது.

 

சன்ரைசர்ஸை பொறுத்தவரை ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, க்ளாசன், இஷான் கிஷன் என பலம் பொருந்திய பேட்டிங் படையே இருக்கிறது. கடந்த போட்டியில் அபிஷேக் சர்மா அடித்து தள்ளிய 150 ரன்கள் அணிக்கு கான்ஃபிடென்சை கொடுத்திருக்கிறது. 

 

பவுலிங்கில் ஷமி, கம்மின்ஸ், ஹர்ஷல் படே என பலமாக கைகள் உள்ளன. ஆனால் அதிக ரன்களை அடிப்பதை இலக்காக கொள்ளாமல் ஒரு நிபுணத்துவம் வாய்ந்த டி20ஐ விளையாட முயல வேண்டும்.

 

மும்பை அணி முதல் போட்டி முதலே சறுக்கி வந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தோற்றாலும் நின்று போராடும் முனைப்பை பெற்றுள்ளது. ஆர்சிபியிடம் இம்மியில் வெற்றி வாய்ப்பை விட்டவர்கள், டெல்லியுடன் கடுமையாக போராடி கடந்த போட்டியில் வென்றார்கள். நல்ல பவுலிங் யூனிட்டை கொண்டு 19வது ஓவரிலேயே டெல்லியின் பேட்டிங் லைன் அப்பையும் முடித்து விட்டார்கள்.

 

பும்ரா, சாண்ட்னர், கரண் சர்மா, போல்ட் என நல்ல பந்துவீச்சு அணி உள்ளது. ஒரு சிலர் சில போட்டிகளில் சொதப்பினாலும் மற்றவர்கள் ஃபார்மில் இருந்து சாதிக்கின்றனர். 

 

மொத்தத்தில் இந்த போட்டி இரு அணிகளுக்குமே பாயிண்ட் டேபிளில் முன்னேற அவசியமான ஒன்று என்பதால் கடுமையான சண்டை, போராட்டம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்