என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

vinoth

வியாழன், 17 ஏப்ரல் 2025 (08:58 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 32 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதிய போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 188 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 188 ரன்கள் சேர்க்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது.  கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 9 ரன்களேத் தேவைப்பட சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சூப்பர் ஓவரிலும் ஸ்டார்க்கே டெல்லி அணிக்காக பந்துவீச அந்த ஓவரில் 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ஸ்டார்க் பேசும்போது “என்னுடைய பவுலிங் பற்றி நன்கு தெரிந்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களை சூப்பர் ஓவரில் பேட் செய்ய அனுப்பியது ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் நான் பந்துவீசும் ஆங்கிள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிர்கொள்வதற்கு கடினமானது. வெற்றி பெற்ற அணியில் இருப்பது மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்