இந்தியாவுக்கு ஆதரவு அளித்த ஆஸ்திரேலிய வீரர்

Webdunia
புதன், 19 மே 2021 (23:56 IST)
சர்வதேச ஊடகங்கள் இந்தியாவை விமர்சிப்பதற்கு  ஆஸ்திரேலியா முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது.  எனவே மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கொரொனாவைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா தீவிர முயற்சி எடுத்துவரும் நிலையில் சரவதேச ஊடகங்கள் இந்தியாவை விமர்சிப்பதற்கு ஆஸ்திரேலியா முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது கட்டுரையில், 140 கோடி மக்கள் தொகைகொண்டுள்ள இந்தியாவில் ஒரு திட்டத்தை செயல்படுத்துவது எளிதல்ல.. தற்போது நோயைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துவருகிறது. இந்திய தலைவர்கள் விரைவில் இதைக் கட்டுக்குள் கொண்டுவருவார்கள் என் நாம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்