ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா கொடுத்த இலக்கை நெருங்கி வருமா ஹாங்காங்?

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (22:29 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று இந்தியா, ஹாங்காங் அணியுடன் மோதுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச தீர்மானித்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 127 ரன்களும், ராயுடு 60 ரன்களும், கார்த்திக் 33 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் 286 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் ஹாங்காங் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 35 ஓவர்கள் இருக்கும் நிலையில் ஹாங்காங் அணி 195 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடும். 10 விக்கெட் கைவசம் இருப்பதால் வெற்றியை நெருங்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்