வாய்ப்பை தவறவிட்ட ரோகித்; சதம் விளாசிய தவான்

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (19:58 IST)
இந்தியா - ஹாங்காங் இடையேயான போட்டியில் முதல் பேட்டிங் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய தவான் சதம் விளாசி அசத்தியுள்ளார்.


இந்தியா - ஹாங்காங் அணிகள் இடையேயான போட்டி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
 
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, தவான் களமிறங்கினர். ரோகித் தவறான ஷாட் ஆடி வெளியேறினார். அந்த தவறான ஷாட் அடிக்காமல் இருந்தால் இந்நேரம் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ஆடி கொண்டிருக்கும்.
 
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் சதம் விளாசி அசத்தியுள்ளார். அம்பதி ராயுடு அரைசதம் விளாசி 60 ரன்களில் வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்