ஹர்பஜன்சிங் சாதனையை முறியடித்த அஸ்வின்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (17:41 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின். இவர் 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

முன்னாள் வீர் ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  217 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் இந்த சாதனையை இன்று அஸ்வின் தகர்த்துள்ளார். உலகளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் வரிசையில்  அஸ்வின் 13 வது இடம் பிடித்துள்ளார்.

இந்த வரிசையில் முன்னாள் வீரர் அனில் கும்ளே 4வது இடத்திலும் முத்தையா முரளீதரன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்