நானும் ஸ்ரேயாஸ் ஐயரும் தக்கவைக்கப்பட மாட்டோம்… அஸ்வின் ஓபன் டாக்!

புதன், 24 நவம்பர் 2021 (11:23 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடிவரும் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு கேப்டன்ஷிப் வழங்காதது குறித்து அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒன்றுக்கும் உதவாத அணியாக இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் இளம் வீரர்கள் வந்ததும் புத்துணர்ச்சி பெற்றது. அதிலும் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு பைனல் வரை சென்றது. இந்நிலையில் இந்த ஆண்டு அவர் காயத்தால் விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஐபிஎல் பின்பாதியில் ஸ்ரேயாஸ் திரும்பியபோதும் அவருக்கு கேப்டன்ஷிப் வழங்கப்படவில்லை. இது சம்மந்தமாக அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்க வாய்ப்பில்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார். அதுபோல தன்னையும் தக்க வைக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்