ஒன்றுக்கும் உதவாத அணியாக இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் இளம் வீரர்கள் வந்ததும் புத்துணர்ச்சி பெற்றது. அதிலும் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு பைனல் வரை சென்றது. இந்நிலையில் இந்த ஆண்டு அவர் காயத்தால் விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஐபிஎல் பின்பாதியில் ஸ்ரேயாஸ் திரும்பியபோதும் அவருக்கு கேப்டன்ஷிப் வழங்கப்படவில்லை. இது சம்மந்தமாக அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் டெல்லி அணியில் இருந்து தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதில் ரிஷப் பண்ட், நோர்ட்யே, அக்சர் படேல், பிருத்வி ஷா ஆகியவர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை எல்லாம் விடுவித்துள்ளது. இதில் ஷிகார் தவான் போன்ற சீனியர் வீரர்களும் ஏலத்தில் விடுக்கப்பட்டுள்ளன.