ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்பட 5 போட்டிகள்: ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (14:20 IST)
வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதில், கிரிக்கெட்டை சேர்க்க ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.அதேபோல், பேஸ்பால், ஸ்குவாஷ், ஷாப்ட்பால், பிளாக் புட்பால் ஆகிய 4 போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் ரஷ்ய நாட்டின் கொடியில்லாமல் தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள  ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்பட 5 போட்டிகளை சேர்ப்பதாக ஒலிம்பிக்  ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

கடந்த 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கடைசியாக கிரிக்கெட் விளையாட்டப்பட்ட நிலையில், 128 ஆண்டுகள் கழித்து  ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்