நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வாலிபர் ஒருவர் நிர்வாணமாக பிணமாக கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டு வாயில் வைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாழை தோட்டத்தில் இந்த வாலிபரின் உடல் நிர்வாணமாக கண்டுக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவர்கள் இறந்த வாலிபரின் உடலில் அவரது அணுறுப்பை அறுத்து வாயில் வைத்துள்ளனர்.
இந்த கொலை கள்ள காதல் தொடர்பாக நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.