இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

Mahendran

வியாழன், 6 பிப்ரவரி 2025 (16:56 IST)
இந்திய விமானப்படையின் விமானம் வயலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில், சிவபுரி என்ற மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 என்ற விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், உடனே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், விமான விபத்து குறித்த விரிவான காரணங்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும், விமானம் வயல்வெளியில் சிதறி கிடந்து தீப்பிடித்த காட்சியை கண்டு, அந்த பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை  ஆரம்பிக்கப்பட்டு   உள்ளதாகவும், கூடுதல் விவரங்கள் இன்னும் சில மணி நேரத்தில் வெளிவரும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் விமானம்  வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம், அந்த பகுதியில் உள்ள கிராம மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்