USAID என்ற அமெரிக்க அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் சர்வதேச தொண்டு நிறுவனம், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. மனிதாபிமான உதவிகள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி உதவி இந்த அமைப்பின் மூலம் தான் உலகின் பல நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த அமைப்புக்கு ஒதுக்கப்படும் தொகை, உதவி தேவைப்படுபவர்களுக்கு செலவாக வேண்டும் என்றே பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தாலும், சமீபத்தில் இது தவறான செயல்களுக்கு தவறான முறையில் செலவிடப்படுவதாக குற்றஞ்சாட்டது. இதனை எலான் மஸ்க் அவர்களும் உறுதி செய்துள்ளார்.
இதனை அடுத்து, இந்த தொண்டு நிறுவனம் மூடப்பட்டது. அதில் வேலை பார்த்த ஊழியர்கள் அனைவருக்கும் பணிக்கு வர வேண்டாம் என்று தகவல் அனுப்பப்பட்டது. மக்களின் வரிப்பணத்தால் இயங்கும் இந்த தொண்டு நிறுவனம், அந்த வரிப்பணம் முட்டாள்தனமான முறையில் செலவிடப்படுவதால் வீணடிக்கப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.