”தாமரை மலரவே மலராது”, நமீதா கூட்டத்தில் கோஷம்! – இளைஞருக்கு அடி, உதை!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (09:22 IST)
விருதுநகரில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் “தாமரை மலராது” என இளைஞர் கூறியதால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகளில் பாஜக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகரில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் “தாமரை மலரவே மலராது” என கோஷமிட்டத்தால் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் இளைஞருக்கும், பாஜகவினருக்கும் கை கலப்பு ஏற்பட்ட நிலையில் பிறகு அவர் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்