ஒரேநாளில் பல மத வழிபாட்டு தலங்களுக்கும் பயணம்! – அரசியல் பேச மறுத்த சசிக்கலா!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (09:11 IST)
விடுதலையான பிறகு பல்வேறு வழிபாட்டு தளங்களுக்கும் பயணித்து வரும் சசிக்கலா நேற்று ஒரே நாளில் மூன்று மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்றுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த சசிக்கலா தொடர்ந்து புனித தலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் ஒரே நாளில் நாகூர் தர்கா, நாகநாத சுவாமி கோவில் மற்றும் வேளாங்கண்ணி சர்ச் ஆகியவற்றிற்கு சென்று தரிசனம் செய்தார். நாகநாத சுவாமி கோவிலில் பூஜை செய்து திரும்பிய அவரிடம் நிருபர்கள் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்