சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (10:14 IST)
மண்ணின் மணத்துடன் எழுதும் பிரபல தமிழ் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான மேலாண்மை பொன்னுசாமி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 66



 
 
திருவள்ளூர் அருகே மணலியில் உள்ள அவரது இல்லத்தில் காலமான மேலாண்மை பொன்னுச்சாமி பல்வேறு சிறுகதைகள் மற்றும் நாவல் எழுதியுள்ளார். மேலும் கடந்த 2007ஆம் ஆண்டு அவர் எழுதிய  மின்சாரப்பூ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
 
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்த இவர், 5-ம் வகுப்புக்கு வரையே படித்தவர் என்றாலும், நூல்களை வாசிப்பதை தன் மூச்சாக கொண்டார். குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார். மேலாண்மை பொன்னுச்சாமி இதுவரை 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்