பிரிட்டனில் அண்மையில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் தொழிலாளர் கட்சிக்கு, 38 சதவீதத்துக்கு குறைவான ஓட்டுகளே கிடைக்கும் என்று பிரபல எழுத்தாளர் மேத்யூ குட்வின் கணித்திருந்தார். கணிப்பு தவறானால், தான் எழுதிய புத்தகத்தை தின்பேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு 40.3 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. மேத்யூவின் கணிப்பு தவறியது. இதனால் சமூக வலைதளங்களில் அவரை பலரும் கேலி செய்தனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் மேத்யூ என் கணிப்புக்கு தவறியது, நான் சொன்னபடி எழுதிய புத்தகத்தை தின்று விடுகிறேன் என கூறி மேத்யூ புத்தகத்தை கடித்து முழுங்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணிப்பில் குறிப்பிட்டு சொல்வது மிகவும் கடினம். கணிப்பில் முன் பின் இருக்கக்கூடும் ஆனால் கணிப்புக்கு அருகில் வந்தாலே அது ஓரளவு சரியான கணிப்புதான் என்று ஏற்றுக்கொள்ளப்படும். இந்நிலையில் இவர் செய்த காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.