74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

Prasanth Karthick

வியாழன், 10 ஏப்ரல் 2025 (08:35 IST)

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் மகன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை முடிவுக்கு வந்துள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையும், அதன் பிறகான செந்தில் பாலாஜியின் கைதும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ALSO READ: அதிகரிக்கும் சுற்றுலா கூட்டம்..! சென்னை - கன்னியாக்குமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!
 

சமீபமாக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் வீட்டிலும், சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். சுமார் 3 நாட்களாக (74 மணி நேரம்) ரவிச்சந்திரன் வீடு மற்றும் சொத்துகள் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தியது. இந்த சோதனை நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

 

இந்த சோதனையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் விரைவில் ஆவணங்களை சான்றாக கொண்டு அமலாக்கத்துறை நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த ரெய்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்