பழம்பெரும்பாடலாசிரியரும் கவிஞருமான நாராயண ரெட்டி மரணம்

செவ்வாய், 13 ஜூன் 2017 (13:27 IST)
தெலுங்கு சினிமாவின் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான நாராயண ரெட்டி உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு  வயது 85. இவர் மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் நடித்த குலேபகாவலி படத்தின் மூலம் பாடலாசிரியராக  அறிமுகமானார்.

 
1977ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 1992ம் ஆண்டு பத்ம பூஷண் விருது, ‘விஸ்வம்பரா’ என்ற நூலுக்காக 1988ம் ஆண்டில் ஞானபீட  விருது பெற்றார். 1997ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.தெலுங்கு மொழியின் மீது பற்று கொண்ட நாராயண ரெட்டி, திரைப்படப் பாடல்கள், இலக்கியம், கவிதைகள் ஆகியவற்றிலும் தனி முத்திரை பதித்தார்.
 
நேற்று காலமான இவரின் இறுதி சடங்குகள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பிறகு நாளை நடைபெறுகிறது. தெலுங்கு சினிமாவின் பிரபலங்களும், ஆளுநர், முதல்வர் அமைச்சர்கள், நடிகர்கள் என அனைவரும் அவரின் மறைவிற்கு இரங்கல்  தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்