6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (16:55 IST)
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது அது பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது என்பதும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக சென்னை மற்றும் கடலோர இடையே மிக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்