மனைவி கழுத்தறுத்து கொலை ! கணவன் கவலைக்கிடம்...

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (20:36 IST)
சென்னையிலுள்ள குன்றத்தூரைச் சேர்ந்தவர் கார்த்தி (36) இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு சௌமியா(32) என்பவருடன் திருமணம் நடந்தது.
தற்போது கார்த்தி எலக்டிரீசியனாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
தன் மனைவி மீது அதிக உரிமை அடைந்துள்ளார். தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என வ்ற்புறுத்தி வந்திருக்கிறார்.
 
இதனால் இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.
 
இந்நிலையில் சௌமியா தன் தாய் வீட்டுக்கு போயுள்ளார். இன்று மாமனார் வீட்டுக்குச் சென்று மனைவியை அழைக்க சென்ற கார்திக்கும் மாமனாருக்கும் இடையே வாக்குவாதம் எழ..அது கைகலப்பாக மாறி சணடையில் முடிந்துள்ளது.
 
ஆத்திரமடைந்த கார்த்தி தன் கையில் இருந்த கத்தியால சௌமியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
 
தன் கண் எதிரிலேயே மகள் கொல்லப்படுவதை தடுக்க முடியாமல் வயதானவர்கள் கதறியுள்ளனர்.
 
மனைவியைக் கொன்ற கார்த்தி தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.
 
உயிருக்காகப் போராடிய கார்த்தியை அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சௌமியா இறந்விட்டார். கார்த்தி கவலைக்கிடமாக உள்ளார். இந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்