எப்பப்பாரு உல்லாசம்.. தொல்ல தாங்கல... அதான் அப்படி பண்ணேன்: மனைவியின் பகீர் வாக்குமூலம்

செவ்வாய், 13 நவம்பர் 2018 (19:21 IST)
எப்பொழுதும் உடலுறவுக்காக தொந்தரவு செய்து வந்த கணவனை எரித்து கொன்றதாக மனைவி போலீஸாரின் விசாரணையின் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அருப்புக்கோட்டை அருகே உள்ள மாந்தோப்பு என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் வீரபத்திரன். இவரது மனைவி மகாலட்சுமி. இவற்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். நான்கு பேரில் இருவருக்கு திருமணம் முடிக்கப்பட்டுவிட்டது. 
 
இந்நிலையில், சமப்வ நாளன்று வீரபத்திரன் தனது தோட்டத்தில் முற்றிலும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இந்த தகவல் போலீஸாருக்கு கொடுக்கப்பட்டு, விசாரானை துவங்கப்பட்டது. 
 
முதல் விசாரணையே மனைவி மகாலட்சுமியிடம்தான். அப்பொழுதே பயத்தில் சிக்கி விட்டார் அவர். கொலை செய்தது நான் தான் என ஒப்புக்கொண்ட மகாலட்சுமி தெரிவித்த காரணம்தான் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 
 
என் கணவன் என்ன அடிக்கடி பாலியல் உறவுக்கு கூப்பிட்டுக்கிட்டே இருப்பார். எனவே தொந்தரவு தாங்க முடியாமல் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அதனால், அவர் தூங்கி கொண்டிருந்த போது, மண்ணெண்ணெய் ஊற்றி எரிச்சிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
இதைகேட்டு அதிர்ந்த போலீஸார் மகாலட்சுமியை கொலை வழக்கில் கைது செய்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்