முதலில் எடுத்து நிலைப்பாட்டை பின்னர் மாற்றிக்கொண்டது தவறு என்கிற பொருளில் அவர் கூறியிருக்கலாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அண்மையில் வைகோ, ஆனந்த விகடன் இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் ”கடந்த சட்டமன்றத் தேர்தலில், விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால் என் இமேஜ் போய்விட்டது உண்மை" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரேமலதா, ”கூட்டணி வேண்டும் என்று தேடி வந்தவரும் அவர்தான். இன்றைக்கு விமர்சனத்தை வைத்திருப்பதும் அவர்தான். ஆகையால் இதுபற்றி அவர்தான் சொல்ல வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், பிரேமலதா கருத்துக்கு பதலளித்த வைகோ, ”முற்றிலும் உண்மை. நாங்கள்தான் நேரில் போய் விஜயகாந்த்தை அழைத்தோம். எத்தனையோ கோடி ரூபாய் கூட்டணிக்காக பேசப்பட்டது என்றும், பழம் நழுவி பாலில் விழும் என்றும் பேச்சுக்கள் அடிப்பட்டன.
அந்த சூழ்நிலையில் இதையெல்லாம் உதறிவிட்டு, எங்களோடு வந்தவர் விஜயகாந்த். அப்படி வந்தவரை நாங்கள் வேட்பாளராக அறிவித்தோம்” என்றார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், “தொடக்கத்தில் மக்கள் நலக்கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது இல்லை என்று முடிவு எடுத்திருந்தோம். பின்னர் மக்கள் நலக்கூட்டணியுடன் தே.மு.தி.க தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டது.
அதனால் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டோம். இது பொதுமக்கள் இடையே விமர்சனத்திற்கு உள்ளானது. முதலில் எடுத்து நிலைப்பாட்டை பின்னர் மாற்றிக்கொண்டது தவறு என்கிற பொருளில் அவர் கூறியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.