பிரதமருக்கு தமிழ்நாடு என்ற இருப்பதே தெரியவில்லை: துரைமுருகன் பாய்ச்சல்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (08:47 IST)
பிரதமர் நரேந்திரமோடிக்கும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கும் தமிழ்நாடு என்ற ஒன்று இருப்பதே தெரியவில்லை என்று திமுக பொருளாளர் கஜா புயல் நிவாரண நிதி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று காட்பாடியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், 'தமிழக முதல்வர் ஹெலிகாப்டரில் ஒப்புக்கு பார்வையிட்டதாகவும், புயல் பாதித்த சேதங்கள் குறித்து கணக்கீடு செய்யாமல் நிதி கேட்டால் மத்திய அரசு எப்படி நிதி தரும்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தானே புயல் பாதிப்பின் நிதியே இன்னும் வந்து சேராத நிலையில் மத்திய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது. புயல் பாதித்த பகுதிகளை பிரதமரோ, மத்திய உள்துறை மந்திரியோ வந்து பார்க்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு தமிழ்நாடு என்று ஒன்று இருப்பது கூட தெரியவில்லை

ஹெலிகாப்டரில் சென்றாலும் புயல் பாதித்த பகுதிகளை நடந்து சென்றும் ஒருசில இடங்களில் முதல்வர் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதனை செய்யவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் தான் முதலில் சேதப்பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார் என்று துரைமுருகன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்