பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படம் ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இமயமலை பகுதியில் நடந்து வருகிறது. முதலில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை அவர் கொடுத்துள்ள 40 நாள் கால்ஷீட்டில் முடிக்க படக்குழுவினர் தீவிரமான படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்கு வந்துள்ளதை அறிந்த மேற்குவங்க மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் அவரை பார்ப்பதற்காக படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கே வந்துள்ளார். அவருடன் ரஜினிகாந்த மரியாதை நிமித்தமாக சில நிமிடங்கள் சந்தித்து பேசியதோடு, அவருடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் டிரெண்டிங்கில் உள்ளது.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்த நிலையில் தற்போது மேற்குவங்க அமைச்சர் ஒருவர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.