நவம்பர் 2 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva
திங்கள், 28 அக்டோபர் 2024 (07:15 IST)
தமிழக பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், நவம்பர் 2 வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது மற்றும் வளிமண்டல காற்றின் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

குறிப்பாக, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீட்புப் பணிகளை கவனித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென்னிந்திய கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், நாளை முதல் நவம்பர் 2 வரை தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ராமநாதபுரம், கன்னியாகுமரி பகுதிகளில் நான்கு சென்டிமீட்டர் முதல் எட்டு சென்டிமீட்டர் வரை மழை பெய்ததாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்