54 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கனமழை.. மிதக்கிறது மதுரை.. பள்ளிகளுக்கு விடுமுறை..!

Mahendran

சனி, 26 அக்டோபர் 2024 (08:33 IST)
மதுரையில் வரலாறு காணாத வகையில், 54 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது 54 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, ஒரு மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துவிட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை செல்லூர் 50 அடி சாலை, கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட இடங்களில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் இன்னும் அடங்கவில்லை என்றும் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கனமழை காரணமாக மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

மதுரையில் மிகவும் குறைவான நேரத்தில் அதிக அளவு மழை பொழிந்ததால் பொதுமக்கள் தங்களின் பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்