ஆந்திராவிலிருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (20:53 IST)
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதியின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
 
சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க கிருஷ்ணா நதியில் இருந்து ஆண்டுக்கு இரண்டு முறை தண்ணீர் திறந்து விட வேண்டுமென இரு மாநில அரசுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
 
அதன்படி தற்போது சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியின் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விடப்படும் தண்ணிரீன் அளவு 200 கன அடியில் இருந்து படிப்படியாக உயர்த்தப்படும் என்று அம்மாநில பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.
 
திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழ்நாட்டு எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள ஜீரோ பாயிண்ட்டை இன்னும் நான்கு நாட்களில் வந்தடையும் என தமிழ்நாடு பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்