பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்த ஆந்திரா

திங்கள், 10 செப்டம்பர் 2018 (20:37 IST)
பெட்ரோல், டீசல் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் ஆந்திரா மாநிலத்தில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

 
இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போது வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளது.
 
இதற்கு எதிர்கட்சிகள் உள்பட பலரும் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெட்ரோ, டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்ற்னர்.
 
ஆனால் மத்திய அரசு அப்போது முதல் இன்று வரை உலக சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வே காரணம் என்று சாக்கு சொல்லி வருகிறது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
 
தற்போது ஆந்திரா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு ரூ.2.5 குறைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்