கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது தெலுங்கு தேசம் கட்சி. ஆனால், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கூட்டணியை முறித்துக்கொண்டது தெலுங்கு தேசம் கட்சி.
இந்நிலையில், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும், தெலங்கானாவில் சந்திரசேகரராவும் பாஜகவுடன் நெருங்கி வருகின்றனர். இந்த கூட்டணியை எதிர்த்து இரு தேர்தல்களிலும் நாயுடுவும் நாங்களும் தனித்தனியே போட்டியிட்டால் அதன் முழுப்பலனும் பாஜக கூட்டணிக்கே கிடைக்கும்.
ஆனால், காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணி குறித்த பேச்சு எழுந்தபோது, கூட்டணி குறித்த பேச்சே இல்லாத போது அது தொடர்பாக ஏன் கருத்து கூறவேண்டும் என சந்திரபாபு நாயுடு ஏற்கனவே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.