நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதை அடுத்து நவம்பர் 30ஆம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் இதனால் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே மீனவர்கள் இன்று முதல் டிசம்பர் இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துள்ளது.