கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக வைகை அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தான் வெள்ள நீர் வெளியேற்றப்படுவதாகவும் எனவே மதுரை உள்பட வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க கோரி மதுரை மாவட்ட பொது மக்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் வைகை கரையில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வைகை கரையோரம் இருக்கும் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.