சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை எச்சரிக்கை..!

ஞாயிறு, 26 நவம்பர் 2023 (07:52 IST)
சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் மழை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என்றும் அதேபோல் அடுத்த மூன்று மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட எட்டு மாவட்டத்தில் உள்ள நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால்  சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் முழு கொள்ளளவை நெருங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்