நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : 6 நாட்களுக்கு கனமழை..!

ஞாயிறு, 26 நவம்பர் 2023 (07:34 IST)
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதை அடுத்து தமிழ்நாட்டில் வரும் ஆறு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை வர பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றின் கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதனால் ஆறு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ஏற்கனவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஆறு நாட்கள் மழை என்பதால் உபரி நீர் வெளியேறி வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எனவே அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்