வின்பாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் ரூ.16,000 கோடி முதலீடு

Sinoj
சனி, 6 ஜனவரி 2024 (18:00 IST)
எலக்ட்ரிக் வாகன  உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட்  நிறுவனம் தென்மாவட்டத்தில் ரூ.16,000 கோடியை முதலீடு செய்துள்ளது.
 

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ் நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்டு, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்யவுள்ளது.

இதற்காக தென்னிந்தியாவில் 3000 முதல் 3500 வேலை வாய்ப்புகள உருவாக்கும் வகையில், தூத்துக்குடியில்,400 ஏக்கர் நிலப்பரப்பில்   நடப்பு ஆண்டே கட்டுமானப் பணிகள்  ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்