இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும். மேலும், இது சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்யும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி புதிய சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மட்டுமே சூரியனை ஆய்வு செய்துவந்த நிலையில் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்திருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமடையைச் செய்திருக்கிறது