கருணாநிதி வீட்டிலேயே நடக்கும் விக்ரம் மகள் திருமணம்...

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (10:30 IST)
நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவின் திருமணம், திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திலேயே நடைபெறவுள்ளது.


 

 
உடல் நலக்குறைபாடு மற்றும் முதுமை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சளி தொள்ளை காரணமாக அவரது குரல் வளையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதனால், அவரால் பேச முடியவில்லை. 
 
அந்நிலையில்தான் சமீபத்தில் அவர் திடீரென முரசொலி அலுவலகத்திற்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார். சுமார் ஒரு ஆண்டுக்கு பின்னர் கருணாநிதி முரசொலி அலுலகத்திற்கு வந்ததால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்தனர். 
 
இந்நிலையில், கருணாநிதியின் கொள்ளுபேரனுக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயாதார்த்தம் நடைபெற்றது. அதில், கருணாநிதி கலந்து கொண்டார்.
 
அவர்களின் திருமணம் வருகிற நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. அதில், கருணாநிதி கலந்து கொள்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அந்த திருமணம் மிகவும் எளிமையாக கருணாநிதி வசிக்கும் கோபாலபுரம் இல்லத்திலேயே நடைபெறவுள்ளது. காலை 10 மணியளவில் கருணாநிதி தாலி எடுத்துக் கொடுக்க இந்த திருமணம் நடைபெறவுள்ளது.
 
இந்த திருமணத்திற்கு மிகவும் குறைவான பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்