நடிகர் விஜய் எந்தக் கட்சிக்கு ஆதரவு ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (18:08 IST)
நேற்று நடைபெற்ற பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. ஆளுங்கட்சி தரப்பில் இருந்து விஜய்க்கு வரும் எதிர்ப்புகளே இதற்கு உதாரணம். முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, விஜய்யின் ’தலைவா’ படம் தொடங்கி, இப்போது வரை அவரது படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
 

இந்நிலையில், சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் !அதுவரை ஹேஸ்டேக் செய்யுங்கள் என தன் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார் விஜய்.

ஆளுங்கட்சி தரப்பினர் வைத்த பேனர் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமானதால் தமிழக மக்கள் ஆளுங்கட்சியினர் மீது கொந்தளிப்பில் உள்ளனர். இந்த தருணத்தில் நடிகர் விஜய் துணிச்சலுடன் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பது போல பேசியுள்ளது, அவரது ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வை தூண்டியிருந்தாலும் கூட, இனிமேல், விஜய்யின் பிகில் படம் வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் வருமா ? அல்லது ஆளும் கட்சி தரப்பில் இருந்து இப்படத்திற்கு எதாவது எதிர்ப்புகள் வருமா ?என்பது பிகில் படம் ரிலீசாகும் போதுதான் தெரியும். ஆனால் இப்படத்தில் சர்ச்சைக்குரிய விசயங்கள் இடம்பெறாத வகையில் பிகிலுக்கு எந்தப் பிரச்சனையும் வரப்போவதில்லை என்றே கருதலாம்.

ஏற்கனவே விஜய் படம் என்றாலே எதாவது கதை திருட்டு  என்பது போன்ற வதந்திகள் பிரச்சனைகள் உருவாகுவதால், பிகில் படத்தின் ரிலீஸ் அன்று பிரச்சனை இல்லாமல் வெளிவர வேண்டுமென பிகில் படக்குழுவினர் உட்பட விஜய் ரசிகர்கள் வரை பலரும் சாமியை வேண்டி வருகிறார்கள். இந்த சமயத்தில் தான் விஜய் தனது அரசியல் பேச்சை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அதிமுக அரசை விமர்சித்து விஜய் வெளிப்படையாகப் பேசியுள்ளதால், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் அவரைப் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் அதிமுகவுக்கு எதிராக உள்ளாரா என்றால் அது இல்லை என்றே கூறலாம். காரணம் தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிகை எடுக்க வேண்டுமென கூறியுள்ளது அவரது சமூகப் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. அதேசமயம் ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து, உங்கள் சினிமா படங்களுக்கு பேனர், போஸ்டர் வைக்கப்பட்டது இல்லையா ? என்ற கேள்வியை விஜய்யை நோக்கித் திருப்பினால் அவரிடம் என்ன பதில் இருக்கப்போகிறது எனத் தெரியவில்லை.

ஆனால், இனிமேல் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என யாருமே பேனர்களை வைக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சிக்கு எதிராக பேசியுள்ள விஜய், முக்கிய எதிர்கட்சியான தி.மு.கவுக்கு ஆதரவு தருவாரா என்றால் அதை விஜய் தனது ரசிகர்களின் எண்ணத்தைப் பொறுத்துத்தான் முடிவெடுப்பார். காரணம், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சூத்திரதாரியாக இருந்து அவரை அணுக்கமாகக் கவனித்து வழிநடத்திக்கொண்டு வருதால், விஜய் தற்போதைக்கு, தனது சினிமா எதிர்காலத்தைத் தவிர அரசியல் எதிர்காலத்தைப் பற்றி  எல்லாம் யோசித்துப் பார்த்து கவலைப் பட போவதில்லை என்றே தெரிகிறது.
 

இப்போதைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் என யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருந்து, தன் மகனை சினிமாவில் வளர்த்துவிட்ட பிறகுதான் விஜய் அரசியலில் கால் பதிப்பார் என்றும், அந்த அரசியல் காலக்கட்டம் வரும்போது,  அப்போது தமிழ்நாட்டில் தனக்குள்ள  மக்கள் செல்வாக்கின் அடிப்படையில் தான் தனிக்கட்சி தொடங்குவார் எனவும் அரசியல் விமர்சகர்கள் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை கணித்து வருகிறார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்