சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகியுள்ளனர். இதனை அடுத்து விஜய்யின் அரசியல் கணக்கு ஆரம்பமாகி உள்ளதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் விஜய் மக்கள் மன்றத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய ஆரம்ப ஒரு கிராம ஊராட்சி எட்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க ஒன்றிய விவசாய அணி செயலாளர் லோகேஸ்வரன், லால்குடி ஒன்றியம் சிறு மருதூர் கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட துணை செயலாளர் கலைவாணன், மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் நிர்வாகி சங்கீதா, திருவெறும்பூர் ஒன்றியம் திருநெடுங்குளம் கிராம ஊராட்சியின் 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க உறுப்பினர் சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மேற்கண்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சமீபத்தில் கவுன்சிலர்கள் பதவி ஏற்று கொண்டனர். இதனை அடுத்து விஜய் மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகிகளிடமும் அவர்கள் வாழ்த்து பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் பெற்ற வெற்றி ஒரு ஆரம்பம்தான் என்றும் இதனை அடுத்து அடுத்தகட்ட வெற்றி வேற லெவலில் இருக்குமென்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது