நெல்லை கண்ணணை கைது செய்ததில்...அரசுக்கு உள்நோக்கம் இல்லை : முதல்வர் !

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (21:34 IST)
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று, சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
பாரத பிரமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து நெல்லை கண்ணன் அவதூறாக பேசியது ஏற்றுக் கொள்ள முடியாது. 
 
எந்தக் கட்சி பிரமுகராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், வீட்டு வாசலில் படம் எடுக்க பிரச்சனை இல்லை. ஆனால் அடுத்தவர் வீட்டு வாசலில்  கோலம் போட்டால் தான் வீட்டு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்