பதவி பங்கீடு: பாமக, தேமுதிகவுடன் எடப்பாடியார் ஆலோசனை!

செவ்வாய், 7 ஜனவரி 2020 (17:21 IST)
பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வென்ற வடமாவட்டச் செயலாளர்களுடனும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். 

 
கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுக பெரும்பானமையான இடங்களில் வெற்றி பெற்றது.  
 
உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவைவிட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது அதிமுகவுக்கு கடும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. மேலும் இந்த தோல்விக்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது காரணம் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி செயலாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். குறிப்பாக பாமக சார்பில் வென்ற இடங்களில் தலைவர் பதவிகளை ஒதுக்குவது சம்பந்தமாக ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்