விஜய் மக்கள் இயக்க கூட்ட ஆலோசனை; விஜய் பங்கேற்கவில்லை என தகவல்!

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (12:44 IST)
விழுப்புரம், கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடிகர் விஜய் பெயரில் அவரது தந்தை சந்திரசேகர் கட்சி தொடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சிக்கும் தனக்கு சம்பந்தம் இல்லை என கூறிய நடிகர் விஜய் தனது ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேரக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

சில நாட்களில் அந்த கட்சி கலைக்கப்பட்டு விட்ட நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் விழுப்புரம் – கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் நடிகர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்நிலையில் தற்போது அந்த நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி விவகாரத்தை தொடர்ந்த இந்த ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்