மைதானத்திற்குள் பாம்பு - இது என்னடா புது ஐட்டமா இருக்கு?

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (10:53 IST)
சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எதிர்த்து வருகிறார்.

 
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் வெடித்தன.
 
அந்நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பினர். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நடத்தினால் மைதானத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்திருந்தார். ஆனாலும், எதிர்ப்புகளை மீறி, கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று போட்டி நடைபெறும் போது பாம்புகள் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல” என எச்சரித்துள்ளார். இதன் மூலம், மைதானத்திற்குள் நுழைய எங்களுக்கு தடை விதித்தால், பாம்புகளை மைதானத்திற்குள் விடுவோம் என அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்