தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் - புவியியல் ஆய்வுமையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (10:40 IST)
ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் போல இனி வரும் நாட்களில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என புவியியல் ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் ஷிமேனோவின் கடலோர பகுதியில் நேற்று 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியது.
 
நிலநடுக்கத்தின் போது, வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.  இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தின் காரணமாக 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். 
 
வரும் நாட்களில் ஷிமேன் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படலாம் என ஜப்பான் புவியியல் ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்